Breaking : மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. இனிமே கனவில் தான் நகை வாங்கணும் போல..!

Gold prices

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. எனினும் வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி உள்ளது.. அதன்படி இன்று காலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்த ரூ.12,480க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை, பிற்பகலில் ரூ.90 உயர்ந்து ரூ.12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதன் மூலம் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்ந்துள்ளது.. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : சிறிய சேமிப்பு, பெரிய லாபம்… வெறும் ரூ. 4000 முதலீடு செய்தால் கையில் ரூ. 13 லட்சம்!

English Summary

The price of gold in Chennai has once again crossed Rs. 1 lakh.

RUPA

Next Post

2026-ல் சைபர் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு! உங்கள் பணத்தையும் தரவுகளையும் பாதுகாக்க இந்த விதிகளைப் பின்பற்றுங்கள்!

Mon Dec 22 , 2025
With cybercrimes on the rise, it is essential to be vigilant now to protect your money and personal information.
cyber crime

You May Like