Breaking : ஷாக்..! ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சம்..!

jewels

சென்னையில் வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680க்கு விற்பனையானது.

இந்த சூழலில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை அதிரடியாக உயர்ந்துள்ளது.. இன்று பிற்பகலில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ரூ.12,515க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ. 1,00,120க்கு செய்யப்படுகிறது.. காலை, மாலை என இன்று ஒரே நாளில் ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை கடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. இன்று காலை ரூ.3 உயர்ந்த வெள்ளி விலை பிற்பகலில் ரூ.2 அதிகரித்துள்ளது.. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.215க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தினமும் ரூ. 333 மட்டும் சேமித்தால், ரூ. 17 லட்சம் கிடைக்கும்! எந்த ஆபத்தும் இல்லை, தபால் நிலையத்தின் அற்புதமான திட்டம்!

RUPA

Next Post

வரும் 18-ம் தேதி ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி.. விஜய்க்கு என்னென்ன நிபந்தனைகள்?

Mon Dec 15 , 2025
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. அக்கட்சி […]
Vijay 2025 1

You May Like