Breaking : ஒரே நாளில் ரூ.2,120 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.20,000 சரிவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி..!! ஒரு கிராமுக்கு இவ்வளவு மட்டும் தான்..!! கடும் கட்டுப்பாடு..!! வெளியான ஷாக்கிங் தகவல்..!!

RUPA

Next Post

லெபனானில் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. பலர் பலி.. தொடரும் பதற்றம்..! போர் எப்போது முடியும்..?

Wed Mar 4 , 2026
கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் லெபனான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அதில் பல மாடிகள் கொண்ட ஒரு கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் […]
lebonon attack 1

You May Like