2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..
சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது.. அதிரடியாக குறைந்துள்ளது.. இந்த நிலையில் இன்று மாலையும் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 150 குறைந்த நிலையில், மாலையில் ரூ.225 குறைந்து ரூ.11,075க்கு விற்பனையாகிறது.. இதனால் இன்று காலை ரூ.1,200 குறைந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,000 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.5000 குறைந்த வெள்ளி ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : மோன்தா புயல் இன்று கரையைக் கடக்கும்போது எந்தெந்த இடங்கள் பாதிக்கப்படும்? வானிலை மையம் முக்கிய அப்டேட்!



