#Breaking : மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ரூ.95,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..

gold coins gold jewellery floor background 181203 24090 1

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.95,200-க்கு விற்பனையாகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.11,900க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.95,200-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

ஆனால் இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ.206-க்குவிற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,06,000 விற்பனை செய்யப்படுகிறது.

Read More : கரூர் சம்பவத்திற்கு பிறகு திமுக நடத்திய ரகசிய சர்வே..!! தவெக தனித்து போட்டியிட்டால்..!! அரசியல் களத்தையே மாற்றும் விஜய்..!!

English Summary

Gold prices in Chennai rose by Rs. 320 per sovereign today and are being sold at Rs. 95,200.

RUPA

Next Post

கல்யாணம் ஆகி 3 வருஷம் தான் ஆகுது.. இளம்பெண் செய்த காரியம்.. பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்..! இப்படியா ஆகனும்..?

Thu Oct 16 , 2025
Mother commits suicide in Tiruppur over child's death
dindigul2 1760422206

You May Like