Breaking : 1 கிராம் ரூ.11,000ஐ கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்.. வெள்ளி விலையும் உயர்வு!

jewels

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனையாகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ரூ.11,060க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11000ஐ கடப்பது இதுவே முதன்முறையாகும்.. அதே போல் ஒரு சவரன் ரூ.88,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,66,000 விற்பனையாகிறது.

Read More : 1 ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்ய தேவையில்லை; வெறும் ரூ.1748க்கு..! ஜியோவின் அசத்தல் ஆஃபர்!

English Summary

In Chennai today, the price of gold rose by Rs. 880 per sovereign and is being sold at Rs. 88,480.

RUPA

Next Post

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? உங்களுக்கான சரியான அளவு எது? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

Mon Oct 6 , 2025
Let's take a look at how much water you should drink and easy ways to help you stay hydrated.
drinking water blog 1

You May Like