Breaking : ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.92,000ஐ தொட்டதால் அதிர்ச்சி.. டஃப் கொடுக்கும் வெள்ளி விலை!

jewels nn

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்து ரூ.92,000ஐ கடந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000, ரூ.87,000, ரூ.88,000, ரூ.89,000, ரூ.90,000 என உச்சம் தொட்டு வந்தது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதே போல் இந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்து ரூ.92,000ஐ கடந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.600 உயர்ந்துள்ளது.. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ரூ.11,500க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று ஒரு கிராமுக்கு காலை ரூ. 3 உயர்ந்த வெள்ளி விலை, மாலையும்ரூ. 3 உயர்ந்து ரூ.190க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது..

Read More : மக்களே உஷார்.. இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! மிக கனமழை பெய்யும்!

English Summary

The price of gold jewellery in Chennai has increased by Rs. 1280 in a single day today, crossing Rs. 92,000.

RUPA

Next Post

3 இல் 1 UPI பேமெண்ட் பாதுகாப்பற்றவை; இன்னும் இதை செய்யாத Google Pay! DoT அதிர்ச்சி தகவல்..!

Sat Oct 11 , 2025
கூகிள் பே (Google Pay) இன்னும் அரசாங்கத்தின் மோசடி ஆபத்து குறியீட்டுக் கருவியை (FRI) தனது தளத்தில் ஒருங்கிணைக்கவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தொலைத்தொடர்பு துறை (DoT) உருவாக்கிய FRI (Fraud Risk Identification) அமைப்பு, தொலைபேசி எண்களை அவற்றின் அபாய நிலை அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இது டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பயனர்கள் டிஜிட்டல் […]
Google Pay has not yet integrated the government s 1760163502556 1 1

You May Like