Breaking : ஒரே நாளில் ரூ.1,960 உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்..! நகைப்பிரியர்கள் ஷாக்!

jewels new

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600-க்கு விற்பனையாகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது.. மேலும் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என 2 முறை உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.245 உயர்ந்து, ரூ.11,825க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 9 உயர்ந்து ரூ.206-க்குவிற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,06,000 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Read More : ரூ.1,000 கோடி பேங்க் டெபாசிட்!. ஒவ்வொரு வீட்டிலும் சொகுசு கார்கள்தான்!. இந்தியாவின் பணக்கார கிராமம் இதுதான்!.

English Summary

In Chennai today, the price of gold rose by Rs. 1,960 per sovereign and is being sold at Rs. 94,600.

RUPA

Next Post

மத்திய அரசு நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.. 1,101 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..

Tue Oct 14 , 2025
Vocational training with incentives in a central government organization.. 1,101 vacancies..!! Apply immediately..
job

You May Like