Breaking : தங்கம் விலை சற்று குறைவு.. ஆனால் வெள்ளி விலை ரூ.12,000 உயர்வு..!

Jewellery 1

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.. அந்த வகையில், காலை சென்னையில் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960க்கு விற்பனையாகிறது.. இன்று காலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ரூ.387க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ரூ.3.87 லட்சத்திற்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : பெண்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்..!! இதுதான் சரியான நேரம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

RUPA

Next Post

தங்கம் வாங்குபவர்களுக்கு குட்நியூஸ் சொல்லப்போகும் மோடி அரசு..! ஒரே நேரத்தில் 3 நல்ல செய்திகளா?

Tue Jan 27 , 2026
தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]
gold price

You May Like