Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. தங்கம் விலை இன்று சற்று குறைவு.. எவ்வளவு தெரியுமா?

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதன்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.. இந்த வார தொடக்கத்தில் தங்கம் சிறிதளவு குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 20 குறைந்து, ரூ.12,000க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.160 குறைந்து, ரூ.96,000 செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.196க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1,96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

RUPA

Next Post

உஷார்.. இந்த அறிகுறி தோன்றினால் கிட்னி சேதம் தொடங்கிடுச்சுனு அர்த்தம்..! உடனே டாக்டர் கிட்ட போங்க..

Fri Dec 5 , 2025
If this symptom starts appearing, it means kidney damage has begun..!
kidney

You May Like