Breaking : இன்று ரூ.90,000ஐ நெருங்கிய தங்கம் விலை..! 2 நாட்களில் ரூ.2,000 உயர்ந்ததால் ஷாக்கில் நகைப்பிரியர்கள்!

heirloom jewellery symbol of tradition and love 1 1

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.1400 தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் இன்று காலையும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ரூ.11,200க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.89,600க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை… அதன்படி ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,67,000 விற்பனையாகிறது.

Read More : Tn Govt: ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு…!

RUPA

Next Post

பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்.. மனைவியை சித்திரவதை செய்த கணவன்.. தட்டிக்கேட்ட மாமனாருக்கு நேர்ந்த கதி..!!

Tue Oct 7 , 2025
Anger over the birth of a baby girl.. The husband who tortured his wife.. The fate of the father-in-law who overheard her..!!
Crime 2025

You May Like