Breaking : தங்கம் விலை இன்றும் உயர்வு.. ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்து வெள்ளி விலை புதிய உச்சம்!

Gold jewels new

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200-க்கு விற்பனையாகிறது.. வெள்ளி விலையும் ரூ.5000 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.92,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.11,520க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று ஒரு கிராமுக்கு காலை ரூ. 3 உயர்ந்து ரூ.195க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Read More : ஷாக்!. AI-யால் 20 லட்சம் பேரின் வேலை பறிபோகும்!. நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்!

English Summary

In Chennai, gold is selling for Rs. 92,200 per sovereign, up by Rs. 200. Silver prices have also risen by Rs. 5,000, touching a new high.

RUPA

Next Post

தினமும் இந்த நேரத்தில் காலை உணவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு ஏறவே ஏறாது..! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

Mon Oct 13 , 2025
Let's see what time you should eat breakfast every day to keep your sugar levels under control.
breakfast n

You May Like