Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

jewels new

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது.

இந்த நிலையில் மீண்டும் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.200 உயர்ந்து ரூ.11,720க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ரூ. 93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து, ரூ.174க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : பெண்களுக்கு ரூ.11,000..! மோடி அரசின் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

RUPA

Next Post

போனில் பேசிய பெண்ணை நம்பி ஓசூர் சென்ற தொழிலதிபர்.. ரூ.5 கோடி கேட்டு சித்ரவதை..! சினிமா பாணியில் கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

Tue Nov 25 , 2025
A businessman who went to Hosur trusting a woman he spoke to on the phone.. was tortured by asking for Rs. 5 crore..!
hosur kidnap

You May Like