Breaking : பேரதிர்ச்சி..! ஒரே நாளில் ரூ.5,040 உயர்ந்த தங்கம் விலை..! வெள்ளியும் ரூ.20,000 அதிகரிப்பு..!

gold coins gold jewellery floor background 181203 24090 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து, ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5,040 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.20 உயர்ந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.3.20 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இந்தியாவை விடுங்க..!! எந்த நாட்டில் மலிவான விலையில் தங்கம் கிடைக்கும் தெரியுமா..? நகைப்பிரியர்களே நோட் பண்ணுங்க..!!

RUPA

Next Post

இந்த ஒரே ஒரு இலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்..! இதை சாப்பிட்டால், அவ்வளவு நல்லது..!

Wed Feb 4 , 2026
நம் சமையலறை அலமாரியில் உள்ள பல பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றுள், ‘கறிவேப்பிலை’ ஒரு சிறப்பு வாய்ந்தது. பலர் இதை அதன் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தி, சாப்பிடும்போது தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால், கறிவேப்பிலை குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல மருந்தாகும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கறிவேப்பிலை அற்புதமாகச் செயல்படுகிறது என்று அறிவியலும் கூறுகிறது. உண்மையில் கறிவேப்பிலை எப்படி சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது? அதை எப்படிப் பயன்படுத்த […]
curryleaves

You May Like