Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று அதிரடி உயர்வு..! நகைப்பிரியர்கள் ஷாக்..!

gold price nn

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.15,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : ஹுருன் பணக்காரர்கள் லிஸ்ட் 2026 : இந்தியாவில் 57 புதிய கோடீஸ்வரர்கள்..! முதலிடத்தில் யார்..?

RUPA

Next Post

போருக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் ரஷ்யா செய்த செயல்..! அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஈரான்..! பரபரப்பு தகவல்கள்..!

Sat Mar 7 , 2026
ரஷ்யா ஈரானுக்கு மிகவும் முக்கியமான உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ சொத்துகள், குறிப்பாக போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் முக்கியமான ராணுவ வளங்களை கண்டறிந்து தாக்குவதற்கு ஈரானுக்கு உதவக்கூடும் என கூறப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை நன்கு அறிந்த அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் AP செய்தி நிறுவனத்திடம் பேசினர். அவர்கள் கூறுகையில், […]
putin

You May Like