#Breaking : இன்று புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. 2 நாட்களில் ரூ.1,600 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்..

1730197140 4512 2 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 95 உயர்ந்து ரூ.9,380க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்தும் ரூ.129-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,29,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

“சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுகிறேன்...” வீடியோவில் கண்ணீர் விட்டு கதறும் விஷால் பட நடிகை..

Wed Jul 23 , 2025
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா.. இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.. இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் #MeToo இயக்கத்தை தொடங்கி உள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக அவர் கண்ணீர் […]
Tanushree Dutta shares emotional video claiming harassment at home plans police complaint 2025 07 4cb2bd73c310cd024edd39f7742e564b 16x9 1

You May Like