#Breaking : மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவா? ரூ.79,000ஐ நெருங்கியதால் பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Gold jewellery 1 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் தாறுமாறாக உயர்ந்தது..

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.78,000-ஐ தாண்டியது.. ஆனால் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, இன்று சென்னையில் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து, ரூ.9,895-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ. 560 உயர்ந்து, ரூ.78,920க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது… தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் வெள்ளியின் விலையும் இன்று எந்த மாற்றமும் இல்லை.. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : GST 2.0 : புற்றுநோய் உள்ளிட்ட இந்த 33 மருந்துகளின் விலை குறையப் போகுது..! மாதாந்திர பில் எவ்வளவு குறையும்?

RUPA

Next Post

புதிய GST வரி விகிதம் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா..? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..?

Fri Sep 5 , 2025
Will the new GST tax rate change the price of gold? What do experts say?
gold diamond etonline 1

You May Like