Breaking : ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.89,000ஐ தொட்டதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

jewels new

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் இன்று காலை ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மாலையில் ரூ.520 உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ரூ.11,125க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.89,000க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இன்று ஒரே நாளில் 1400 உயர்ந்துள்ளது.

அதே போல் இன்று காலை விலை ரூ.1 உயர்ந்த நிலையில் தற்போது மாலையும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.167க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,67,000 விற்பனையாகிறது.

Read More : Breaking : பீகாருக்கு 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்.. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!

RUPA

Next Post

இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.40,000 தள்ளுபடி! ரூ.20க்கு 100 கி.மீ. பயணிக்கலாம்!

Mon Oct 6 , 2025
நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம் எனில், இப்போது அதனை வாங்குவது சரியாக இருக்கும்.. நீங்கள் ஒரு மின்சார வாகனத்தை வாங்கினால், உங்களுக்கு ரூ. 45 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகைகள் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களில் கிடைக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஜாய் இ-பைக், வுல்ஃப் பிளஸ் மற்றும் ஜெனரல் நெக்ஸ்ட் நானு பிளஸ் ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய தள்ளுபடியை […]
electric scooter

You May Like