Breaking : ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை.. ரூ.91,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்!

Jewels 2

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000, ரூ.87,000, ரூ.88,000, ரூ.89,000 என உச்சம் தொட்டு வந்தது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் இன்று காலையும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இன்று காலை ரூ.90,400க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை தற்போது பிற்பகலில் ரூ.91,080க்கு விற்பனையாகிறது.. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.11,385க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,080க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1480 உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் ரூ.3,480 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : பேமிலி கார் வாங்க இதுதான் சரியான நேரம்.. கிட்டத்தட்ட ரூ.76 ஆயிரம் குறைஞ்சிடுச்சு..!! உடனே கிளம்புங்க..

English Summary

Jewelers have been shocked as the price of gold has risen by Rs. 1480 in a single day today.

RUPA

Next Post

இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? - வானிலை ஆய்வு மையம் அலர்ட்..

Wed Oct 8 , 2025
The Meteorological Department has said that there is a possibility of heavy rain in Tamil Nadu today and tomorrow.
rain 2025 2

You May Like