#Breaking : ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை! ரூ.76,000-ஐ கடந்ததால் ஷாக்கில் நகைப்பிரியர்கள்!

gold diamond etonline 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தது.. ஆனால் தற்போது தங்கம் விலை உயர்ந்து வருகிறது..

இந்த சூழலில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.9,470-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து, ரூ..75,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.131-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,31,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மட்டும் 2 முறை உயர்ந்துள்ளது.. இன்று மாலையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது.. எனவே இன்று ஒரே நாளில் ரூ.1,040 வரை உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.65 உயர்ந்த நிலையில் ரூ.9,53ஒரு சவரன் தங்கம் விலை ரூ.76,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

RUPA

Next Post

ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் என்ன செய்வது..? எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்..?

Fri Aug 29 , 2025
What to do if there is Rahu Dosha in the horoscope..? Which temple should I go to..?
rahu

You May Like