Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் தாறுமாறு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

jewels new

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 2 நாட்கள் தங்கம் விலை ரூ.1,120 குறைந்தது.

இந்த நிலையில் மீண்டும் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.170 உயர்ந்து ரூ.ரூ.11,360க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.172க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,72,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தகவல் அறியும் உரிமைச் சட்டம்…! தனிப்பட்ட தகவல்களை வெளியிட தமிழக அரசு தடை…!

English Summary

Gold prices rose by Rs. 1,360 per sovereign today and are being sold at Rs. 93,040.

RUPA

Next Post

குட்நியூஸ்.. 5 ஆண்டுகள் இல்ல.. இனி 1 வருடத்திலேயே Gratuity பெறலாம்!

Sat Nov 22 , 2025
நாடு முழுவதும் நேற்று முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்களில், அடிக்கடி வேலை மாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் நன்மை தரும் முக்கிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர், Gratuity பெற குறைந்தது 5 வருட சேவை அவசியம் இருந்தது. ஆனால் புதிய தொழிலாளர் குறியீடுகளின் (Labour Codes) கீழ் இது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பல தசாப்தங்களாக இருந்து வந்த 29 […]
Gratuity 1

You May Like