Breaking : வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றும் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

DALL E 2023 11 06 17 35 28 Create a luxurious and captivating banner for an article that celebrates the marriage of traditional Indian gold jewelry with contemporary design aest e6f89ab642 1 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.720 உயர்ந்து, ரூ.96,560 செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து, 12,070க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.720 உயர்ந்து, ரூ.96,560 செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.4 உயர்ந்து, ரூ.196க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : சிவகங்கை பேருந்து விபத்து.. பிரதமர் மோடி இரங்கல்! ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

English Summary

The price of gold in Chennai today rose by Rs. 720 per sovereign, reaching Rs. 96,560.

RUPA

Next Post

FLASH | அதிமுக மூத்த தலைவர் வி.சி.ராமையா சாலை விபத்தில் உயிரிழப்பு..!! சோகத்தில் தொண்டர்கள்..!!

Mon Dec 1 , 2025
அதிமுக மூத்த தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் முக்கியப் பங்காற்றியவருமான வி.சி.ராமையா, இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வாண்டான்கோட்டை அருகே இன்று காலை இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. வி.சி.ராமையா அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது கார் ஒன்று மோதியுள்ளது. […]
Admk 2025

You May Like