சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது..
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை சரசரவென குறைந்தது.. நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 , குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து ரூ.74,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.123-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,23,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.