Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,600 உயர்வு..! வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு!

gold new

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. ஆனால் இந்த வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை, நேற்று சரிந்தது…

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.11,800க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

ஆனால் இன்று வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.182க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,82,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : UPSC மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை…! இன்று முதல் விண்ணப்பம்…!

RUPA

Next Post

இந்த அறிகுறி தோன்றினால் சிறுநீரகம் செயலிழக்க தொடங்கிடுச்சுனு அர்த்தம்.. உஷாரா இருங்க..!

Thu Nov 13 , 2025
If this symptom appears, it means that the kidneys are starting to fail.. Be careful..!
kidney cancer

You May Like