Breaking : மீண்டும் ஷாக்..! ஒரே நாளில் ரூ.1,840 உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி ரூ.5000 உயர்வு..!

Gold Jewellery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.230 அதிகரித்து ரூ.13,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,09,280க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. உயர்ந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ. 2.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் ரூ.10,000 அளவுக்கு குறைந்தது.. ஆனால் தொடர் சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : கொங்கு மண்டலத்தை தட்டி தூக்க திமுக போடும் ஸ்கெட்ச்..! செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான் கை கொடுக்குமா..?

RUPA

Next Post

PAN அட்டை பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..! ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.. இந்த வரம்பை மீறினால்..!

Sat Mar 28 , 2026
புதிய பான் அட்டை (PAN card) விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்தப் புதிய விதிகள், பான் அட்டையைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும். இதுவரை, பான் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வங்கி வைப்புகள், பணம் எடுத்தல் மற்றும் சொத்துகளை வாங்குதல்-விற்றல் போன்ற நடவடிக்கைகளில் பான் அட்டையைப் பயன்படுத்துவது தொடர்பாகப் புதிய விதிகள் வரவுள்ளன. அவை என்னவென்று இப்போது பார்ப்போம். […]
pan card new

You May Like