Breaking : ஒரே நாளில் ரூ.2,080 உயர்ந்த தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

gold new

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக ரூ.80,000லிருந்து ரூ.97,000 வரை விலை உயர்ந்து விற்பனையானது.. இன்னும் சில நாட்களில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.260 உயர்ந்து, ரூ.12,180-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ரூ.97,440-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,080 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று சென்னையில் வெள்ளி விலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.188க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1,88,000க்கு விற்பனையாகிறது..

Read More : இந்த 3 பேர் மட்டும் பாஸ்போர்ட் இல்லாமல் உலகில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. யார் யார்?

RUPA

Next Post

எச்சரிக்கை..!! மருத்துவர் பரிந்துரைத்த சளி மருந்தால் விபரீதம்..!! ஒன்றரை வயது குழந்தை துடிதுடித்து மரணம்..!! குமரியில் ஷாக்..!!

Tue Oct 21 , 2025
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று, கடந்த சில நாட்களாகக் கடுமையான சளிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் சளிக்கான சொட்டு மருந்து ஒன்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தச் சொட்டு மருந்தைக் குழந்தைக்கு கொடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தை திடீரென மயங்கி […]
Baby 2025

You May Like