Breaking : காலையிலேயே நற்செய்தி..! ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது..!

gold price prediction

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததால் சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது

இந்த நிலையில் தங்கம் விலை இன்று காலை குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.165 குறைந்து, ரூ.12,350க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ. 98,800க்கு செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததால் சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.211க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,11,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தமிழக மக்களுக்கு ஜாக்பாட் செய்தி..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Due to a sharp drop in gold prices today, the price of one sovereign fell below Rs. 1 lakh.

RUPA

Next Post

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை.. ரூ. 96,210 சம்பளம்..! எப்படி விண்ணப்பிப்பது..?

Tue Dec 16 , 2025
Assistant job in Tamil Nadu Cooperative Bank.. Rs. 96,210 salary..! How to apply..?
job

You May Like