Breaking : பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. ஆவின் பொருட்களின் விலை குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?

Aavin 2025

ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில் ஆவின் பொருட்களின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது..

ஜிஎஸ்டி வரியில் செய்யப்பட்ட திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும். இன்று (செப்டம்பர் 22) முதல், 375க்கும் மேற்பட்ட பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும். பால் பொருட்கள், கார்கள், மின்னணு பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்கு கூடுதலாக, ஆடம்பரப் பொருட்களும் இந்த வரி குறைப்பின் வரம்பிற்குள் வந்துள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் தனது 52வது கூட்டத்தில் ஸ்லாப் விகிதங்களைக் குறைக்க எடுத்த முடிவு பெண்கள், கிராமப்புற மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்…


இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில் ஆவின் பொருட்களின் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 லிட்டர் நெய் ரூ.10,900ஆக விலை குறைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

அதே போல் 200 கிராம் பனீர் பாக்கெட் விலை ரூ.120-ல் இருந்து ரூ.110ஆகவும், 500 கிராம் பனீர் ரூ.300-ல் இருந்து ரூ.275ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது..

Read More : ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகும் விலை குறையவில்லையா? புகார் அளிக்க உதவி எண்களை அறிவித்த மத்திய அரசு..

English Summary

With the GST tax reduction coming into effect across the country from today, Aavin has announced a reduction in the prices of its products.

RUPA

Next Post

ஒரின சேர்க்கை டார்ச்சர்.. வீடியோ எடுத்து மிரட்டி பணம் நகை பறிந்த கல்லூரி மாணவர்கள்..!! கடைசியில் விபரீதம்..

Mon Sep 22 , 2025
Homosexual torture.. College students who took video and blackmailed and extorted money and jewelry..!! What happened next..
Homo Sexual 2025

You May Like