#Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1000 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..

Jewellery 1

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1600 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 125 குறைந்து ரூ.9,255க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.74,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.1000 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ITR : வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு.. இந்த தேதிக்குள் செய்யலன்னா ரூ.5000 அபராதம்..

RUPA

Next Post

டிமாண்ட்.. அவமானம்.. பிரியாவிடை.. ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஒரு சிம்பிள் மேட்டர் இல்ல.. ஏன்னா பின்னணியில் அவ்ளோ நடந்துருக்கு..

Thu Jul 24 , 2025
ஜெக்தீப் தன்கர் ஏன் திடீரென ராஜினாமா செய்தார்? அவர் ராஜினாமா செய்திருந்தால், அரசாங்கம் அவரைத் தொடர்பு கொண்டிருக்குமா? இந்தக் கேள்விகள் ஜூலை 21 முதல் அரசியல் வட்டாரங்களில் எழத் தொடங்கி உள்ளன… இந்த சூழ்நிலையில், ஜெக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா செய்ய என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது… ஆம், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு மிகப்பெரிய காரணம் மத்திய அரசுடன் அவரது உறவுகள் […]
88nkafso jagdeep dhankhar 625x300 22 July 25 1

You May Like