Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1,120 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.10,000 சரிவு..!

jewel 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.10,000 குறைந்து வெள்ளி ரூ. 2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : “ஆதவை தவெகவில் இருந்து விலக்கினால் விஜய்க்கு நல்லது.. இல்லன்னா இதுதான் நடக்கும்..” பாஜக நிர்வாகி அட்வைஸ்..!

RUPA

Next Post

மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடித்துவிடுங்கள்! இல்லையெனில், நீங்கள் நிறைய இழக்க நேரிடும்!

Sat Mar 14 , 2026
2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்து, புதிய நிதியாண்டான 2026-27 தொடங்கவுள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் சில முக்கிய நிதி சார்ந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டால், வரிச்சுமையை குறைப்பது மட்டுமின்றி, அபராதங்கள் மற்றும் கூடுதல் வட்டி செலுத்துவதையும் தவிர்க்க முடியும். பழைய வரி விதிப்பு […]
march 31

You May Like