Breaking : குட்நியூஸ்.. காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் தாறுமாறு குறைவு.. எவ்வளவு தெரியுமா? நகைப்பிரியர்கள் நிம்மதி..!

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் மீண்டும் குறைந்தது.. குறிப்பாக கடந்த 3 நாட்களில் சுமார் ரூ.3,700 வரை தங்கம் விலை குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை உயர்ந்த தங்கம் விலை மாலையில் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்த நிலையில், மாலை ரூ.140 குறைந்து, ரூ.11,400க்கு விற்பனையாகிறது.. இதனால் இன்று மாலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ரூ.91,200-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று காலை உயர்ந்த நிலையில், இன்று மாலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது..

அதே போல் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.170க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

100 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மீது குருவின் பார்வை.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்...!

Fri Oct 24 , 2025
Guru's view on Saturn after 100 years.. Raja Yoga for these 4 zodiac signs...!
zodiac

You May Like