Breaking : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்..! ரூ.10,000 சரிவு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

Gold Jewellery

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.115 குறைந்து, ரூ.15.660க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! இதை செய்தால் உங்களுக்கும் பணம் வரும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

RUPA

Next Post

இந்த ஒரு தடுப்பூசி போதும்..! இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்கும்..!

Mon Mar 2 , 2026
பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பில் மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொடிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க அரசாங்கம் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தேவையற்ற பயம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களைக் காப்பாற்ற, ‘பயத்தை விடுங்கள்.. பாதுகாக்கப்படுங்கள்!’ என்ற முழக்கத்துடன் ஒரு பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு பெண்களிடையே மிகவும் பொதுவான நோயாக கர்ப்பப்பை வாய்ப் […]
cervial cancer vaccine

You May Like