Breaking : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்..! ரூ.1,120 குறைந்த தங்கம் விலை..! நகைப்பிரியிர்கள் மகிழ்ச்சி..!

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, இன்று காலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480க்கும் விற்பனையாகிறது.. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 2.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : காலையிலே பரபரப்பு.. ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

RUPA

Next Post

சீன CCTV கேமராக்களுக்கு தடை விதித்த இந்திய அரசு..! உங்கள் வீட்டில் உள்ள கேமராக்களை நீங்கள் அகற்ற வேண்டுமா..?

Mon Apr 6 , 2026
இந்தியாவின் பாதுகாப்பையும், அதன் குடிமக்களின் தரவு தனியுரிமையையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் நாட்டின் முக்கியப் பகுதிகளில் சீன சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த அது தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில், ஏற்கனவே தங்கள் வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ சீன கேமராக்களைப் பயன்படுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவற்றை அகற்ற வேண்டுமா..? இந்தப் பிரச்சினைகள் குறித்து நிபுணர்கள் […]
cctv 1 1 1

You May Like