தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கமால் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அந்த தீர்ப்பில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.. மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது..
மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என 14 கேள்விகள் எழுப்பி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடிதம் அனுப்பி இருந்தார்.. இந்த வழக்க கடந்த செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பி.ஆர். கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.. அதில் “ மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது… மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.. மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.. மசோதாவிற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது.
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. மத்திய அரசு சொல்வது போல ஆளுநருக்கு 4-வது வாய்ப்பு இல்லை.. மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் இல்லை எனில் நிராகரிக்க வேண்டும்.. இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பது தான் ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம்.. அதை விடுத்து மசோதாக்களை கால வரையின்றி நிறுத்தி வைக்க முடியாது.. காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அமைச்சரவையும் தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும்.. ஒரு மாநிலத்தில் 2 அதிகார மையங்கள் இருக்கக் கூடாது. பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்..
ஆனால் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது.. மசோதா மீது முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி, ஆளுநருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது.. ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள தான் முடியும்.. ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும்..” என்று தெரிவித்தது..
Read More : “உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்..” முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!



