2002ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அபினய். தமிழில் முன்னணி நடிகராக அவர் மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தனது முதல் படத்தை தொடர்ந்து ஜங்க்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சில காரணங்களால் திரைத்துறையில் இருந்து விலகி, சில விளம்பரங்கள் மற்றும் பின்னணி குரல் (dubbing) துறைகளில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் அபினய் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்கததால் அவருக்கு போதிய வருமானமும் இல்லை.. இதனால் அவர் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில வருடங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்..
அபினய் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் தொடர்பான உடல்நலக் குறைபாடால் சிகிச்சை பெற்று வந்தார்… வயிறு வீங்கி எலும்பும் தோலுமாக இருந்த அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு நடிகர் தனுஷ் சமீபத்தில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் பல பிரபலங்களும் அவருக்கு உதவி செய்தனர்..
இந்த நிலையில் நடித்த நடிகர் அபினய் சென்னையில் இன்று அதிகாலை 4 மணிக்கு காலமானார்.. அவருக்கு வயது 44. கல்லீரல் கோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடும் அவதியடைந்து வந்த நிலையில் அபினய் இன்று உயிரிழந்தார்.. அவரது மறைவு செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
Read More : Flash : நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிந்ததால் பரபரப்பு!



