டிட்வா புயல் நெருங்குவதால் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். அதனால், 4 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் டிட்வா புயல் நெருங்குவதால் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று மதியம் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.. கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரை நாள் விடுப்பு அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.. மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் இன்று மதியம் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.. மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
Read More : “ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க பாடுபடுவேன்..” செங்கோட்டையன் உறுதி..!



