2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. நேற்று முன் தினம் ரூ.2,400 அதிகரித்த நிலையில் நேற்று ரூ.1,280 குறைந்தது..
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.190 குறைந்து ரூ.11,550க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ. 92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.175க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகை + பதவி உயர்வு…! அன்புமணி கோரிக்கை…!



