Breaking : ஹேப்பி நியூஸ்.. ஒரே நாளில் ரூ.2,400 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

gold price prediction

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. ஓரிரு நாட்கள் மட்டுமே விலை குறைந்தது.. நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி தங்கம் விலை, ஒரு கிராமுக்கு ரூ.300 குறைந்து, ரூ.11,600க்கு விற்பனையாகிறது.. அதே போல் இன்று ஒரு சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.93,600-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2,400 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 2 குறைந்து ரூ.180-க்குவிற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

ஆபரேஷன் சிந்தூர் ஹீரோக்களுக்கு பாராட்டு.. மத்திய அரசு வெளியிட்ட வீரதீர விருது பட்டியல்..!

Wed Oct 22 , 2025
Praise for the heroes of Operation Sindoor.. The list of bravery awards released by the central government..!
Operation Sindoor

You May Like