Breaking : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தொடர் கனமழையால் நடவடிக்கை..!

Rain 2025 1

நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும்.


இந்த நிலையில் சென்னை, திருவள்ளூருக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்ச் அலர்ட் தற்போது ரெட் அலர்ட்டாக மாறி உள்ளது.. அதன்படி, சென்னையில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதே போல் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. மேலும் தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர்..

Read More : Flash : பேய் மழை பொளந்து கட்டும்.. இன்று சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்.. வந்தது புதிய எச்சரிக்கை..!

RUPA

Next Post

இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்..! பணம் கொட்டப் போகுது..! நீங்க எந்த ராசி?

Mon Dec 1 , 2025
சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக வந்தால், சில ராசிக்காரர்களுக்கு வருமானம் மற்றும் பலம் அதிகரிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ராஜயோக கிரகங்களான சுக்கிரனும் ராகுவும் தற்போது விருச்சிக ராசியில் ஒன்றாக சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு வருமானம், பலம் மற்றும் வெளிநாட்டு வருமானம் அதிகரிக்கும். சிறிது முயற்சி செய்தால், அவர்களின் வாழ்க்கை மாறலாம் மற்றும் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்படலாம். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சுப பலன்களை அனுபவிக்கப் போகும் ரிஷபம், கடகம், […]
rare yogam horos

You May Like