கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
அந்த வகையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனையானது.. இதனால் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனையானது..
இந்த நிலையில், சென்னையில் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.290 உயர்ந்து, ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ. 2,320 அதிகரித்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,600 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் இன்று மாலை வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ. 12 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.10 உயர்ந்து ரூ.340 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று காலை ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில் மாலை ரூ.10,000 உயர்ந்து ரூ.3.40 லட்சத்திற்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ரூ.22,000 விலை உயர்ந்துள்ளது..
Read More : நீங்கள் இதை செய்தால், உங்கள் பணம் நிச்சயம் இரட்டிப்பாகும்…! 5 ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் வட்டி கிடைக்கும்..



