ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மதியமும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று மதியம் கிராமுக்கு மேலும் ரூ.280 உயர்ந்த நிலையில், ரூ.15,610க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை சவரன் ரூ.2,960 உயர்ந்த நிலையில் மேலும் ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,24,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1,24,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : பிப்ரவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..? வாடிக்கையாளர்களே நோட் பண்ணுங்க..!!



