மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்சன் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் மாநிலங்களவைக்கு செல்கின்றனர். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மீண்டும் மாநிலங்களவைக்கு செல்ல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.