மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது “ மகளிரின் பொருளாதார விடுதலைக்கு உதவும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடி 14 லட்சம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகையை முதல்வர் வழங்கி வருகிறார்.. 26 மாதங்களாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை ரூ.26,000 கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.30,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடைய வேண்டும் என்று நோக்கிய முதல்வர் சில நிபந்தனைகளை தளர்த்தினார்..
அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், ஓஏபி பெறும் குடும்பங்கள் ஆகியோருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.. அரசு சேவைகள் மக்களிடம் சென்று சேரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.. இதுவரை 9055 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.. இதுவரை இந்த உரிமைத்தொகை 28 லட்சம் மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனுக்களை அளித்துள்ளனர்..
மகளிர் உரிமைத்தொகை கோரிய புதிய மனுக்கள் வருவாய் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.. இந்த பணிகள் நவம்பர் 30-ம் தேதி முடிவடையும்.. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்ங்களின் அடிப்படையில் தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் உரிமைத்தொகை வழங்கப்படும்.. தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார தன்னிறைவுக்கு என்றும் நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்..” என்று தெரிவித்தார்.
Read More : “மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி பேசமாட்டான்.. பார்த்துக் கொள்ள துப்பில்லை..” அன்புமணியை சாடிய ராமதாஸ்!