Breaking : புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா.. கட்சியின் பெயர் அறிவிப்பு..!

Mallai sathya

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் சில மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இந்த மோதல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை..


கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

மேலும் மல்லை சத்யாவை என் உடன்பிறவாத தம்பியைப் போல நடத்தி வந்தேன். மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து, கட்சியை பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக அவர் தொடர்பு வைத்துள்ளார். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடனும் நெருக்கமாகப் பழகி வருகிறார் என குற்றம் சாட்டினார்.

ஆனால் தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என உருக்கமாக பேசியிருந்தார் மல்லை சத்யா. மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.

இதனிடையே, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி முதலில் மல்லை சத்யாவை ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிய வைகோ, பின்னர் அவரை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டார்..

இதை தொடர்ந்து மதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ள மல்லை சத்யா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது.. ஆனால் நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். நவ.20-ம் தேதி கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்..

இந்த நிலையில் மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.. மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யா உடன் இணைந்து இந்த புதிய கட்சியை தொடங்கினர்.. சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது.. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..

Read More : Breaking : மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

RUPA

Next Post

பீகாரில் 10வது முறையாக ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார், இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் ஒருவர்! முழு லிஸ்ட்!

Thu Nov 20 , 2025
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிஅமோக வெற்றியைப் பதிவு செய்தது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. 74 வயதான நிதிஷ், தற்போது மீண்டும் முதலமைச்சராக […]
nitish kumar 1

You May Like