தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகான பொதுத்தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார்.. மேலும் பேசிய அவர் “ மார்ச் 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 26 வரை நடைபெறும்.. தமிழ்நாட்டில் மார்ச் 11-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 6 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தேர்தல் ஆணையத்திடம் பேசிய பிறகே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 4 முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
மே 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.. அதே போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும்..” என்று தெரிவித்தார்.. மேலும் 12-ம் வகுப்பில் கணக்குபதிவியல் தேர்வுக்கு முதல்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்..



