Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.6000 உயர்வு!

gold price prediction

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.98,000க்கு விற்பனையாகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது..

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.98,000க்கு விற்பனையாகிறது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 1600 உயர்ந்து ரூ.98,000க்கு செய்யப்படுகிறது.. ஆபரணத்தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.6 உயர்ந்து ரூ. 215க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து ரூ.2,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தேர்வு, நேர்காணல் கிடையாது.. தமிழ்நாடு அரசில் கள உதவியாளர் வேலை..!! செம அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

English Summary

Jewellery prices in Chennai hit a new high with a sovereign selling for Rs. 98,000.

RUPA

Next Post

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்...! ராமதாஸ் கோரிக்கை

Fri Dec 12 , 2025
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை வீட்டுக் […]
ramadass 2025

You May Like