#Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்.. தங்கம் விலை ரூ.77,000-ஐ தாண்டியது.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு! பேரதிர்ச்சியில் மக்கள்..

gold necklace from collection jewellery by person 1262466 1103

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் தாறுமாறாக உயர்ந்தது..

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.9,705-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து, ரூ..ரூ.77,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.. கடந்த 2 நாட்களில் ரூ.2000க்கும் மேல் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து, ரூ.136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,36,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

இந்த உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளை பழம் சாப்பிடவே கூடாது..!! உஷாரா இருங்க..

Mon Sep 1 , 2025
People with these health problems should not eat pomegranate..!!
Pomegranate2

You May Like