#Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.78,000-ஐ தாண்டியது தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு பேரிடி..

360 F 612420676 Az3c9EUa7JNa5ShgNII8DGt4XNEOtqv4 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் தாறுமாறாக உயர்ந்தது..

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.78,000-ஐ தாண்டியது.. இன்று சென்னையில் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து, ரூ.9,805-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து, ரூ.78,440க்கு விற்பனை செய்யப்பட்டது.. இதன் மூலம் தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரன் ரூ.1,480 உயர்ந்துள்ளது.. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.78,000-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் வெள்ளியின் விலையும் இன்று எந்த மாற்றமும் இல்லை.. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : அலர்ட்..! புதிய வகை மோசடி.. இதில் சிக்கினால் மொத்த பணமும் காலி! SBI வார்னிங்!

RUPA

Next Post

தமிழக ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. ரூ.71,900 வரை சம்பளம்..!! செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..

Wed Sep 3 , 2025
A notification has been issued to fill various district-wise vacancies under the Tamil Nadu Panchayat Department.
job

You May Like