Breaking : புதிய உச்சம்.. ரூ.85,000ஐ கடந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்.!

jewels new

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


கிட்டத்தட்ட 1 மாதமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், சென்னையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்தது.. வார இறுதியில் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது.. இந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் தங்கம் விலை ரூ.84,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. எனினும் பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்தது.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ.10,640க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ரூ.85,000ஐ தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 6 உயர்ந்து, ரூ.159க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,59,000 விற்பனையாகிறது.

Read More : உணவுப் பதப்படுத்தும் தொழில்கள்.. ரூ.40,000 வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Gold prices today rose by Rs. 720 per sovereign and are being sold at Rs. 85,120.

RUPA

Next Post

வீட்டிலிருந்தே மாதம் ரூ.6000 சம்பாதிக்கலாம்..! தபால் நிலையத்திற்கு சென்று இந்த வேலையை முடிக்கவும்.

Sat Sep 27 , 2025
Let's now look at the post office savings plan that can earn you Rs. 6,167 per month.
w 1280h 720imgid 01jde7kefnz8rs5dbdzwtds8wqimgname tamil news 2024 11 24t100843.526

You May Like