Breaking : வரலாறு காணாத புதிய உச்சம்; ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்த வெள்ளி விலை; தங்கம் விலையும் உயர்வு!

gold silver price

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 99,200க்கு செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று காலை உயர்ந்துள்ளது… அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.12,400க்கு விற்பனையாகிறது. இதனால் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.99,200க்கு செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இன்று வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ.222க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.11,000 உயர்ந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக ரூ. 2,22,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தொடர்ந்து புதிய உச்சம்..! ஆனாலும் தங்கம் வாங்க இது தான் சரியான நேரமா? நிபுணர்களின் அட்வைஸ் என்ன?

English Summary

In Chennai today, the price of gold has increased by Rs. 400 per sovereign and is being sold at Rs. 99,200.

RUPA

Next Post

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்தியாவின் 'Homebound' படம்..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கரண் ஜோஹர்..!

Wed Dec 17 , 2025
The film Homebound has been selected for the shortlist in the Best International Feature Film category at the 98th Academy Awards.
Homebound Oscars 2026

You May Like